வார்த்தைகள் அம்பு போன்றது திரும்ப நமக்கு வரும் பொழுது தான் அதன் வலி புரியும்.

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 667
Contact:

வார்த்தைகள் அம்பு போன்றது திரும்ப நமக்கு வரும் பொழுது தான் அதன் வலி புரியும்.

Post#1 » Sat Oct 08, 2016 12:29 pm

திரும்பி வரும் பொழுது தான் வலி புரியும்.

வார்த்தைகள் அம்பு போன்றது திரும்ப நமக்கு வரும் பொழுது தான் அதன் வலி புரியும்.

ஒரு சின்ன கதை ஒரு அழகிய கிராமத்தில் ஒரு அழகான ஒரு குடும்பம்.கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் .ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை .பிள்ளைகளை நன்றாக படிக்கச் வைத்து ஆளாக்க வேண்டும் என்று காடு மேடு என்று பாராமல் உழைத்து இருவரையும் நன்கு படிக்க வைத்து பட்டினம் அனுப்பி வேலை பார்க்க வைத்தனர்.

இருவரும் கை நிறைய சம்பாதித்தனர் .அம்மா அப்பா இரண்டு பெரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க. மீண்டும் அவர்கள் சென்னை போன்ற நகரத்துக்கு சென்று விட்டனர்.

இவர்கள் இருவருக்கும் முதுமை காலம் வந்துவிட்டது .எங்கு வேளைக்கு போவது உடம்பில் தெம்பு இல்லை .நம் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என்று பட்டினம் செல்ல ஆசைப்பட்டனர் .

ஒரு தொலைபேசி அழைப்பு தம்பி நாங்கள் இங்கு இருந்து அங்கு வருகிறோம்.மகன் சொன்னான் அம்மா அம்மா இங்கு ரொம்ப கஷ்டம் .என்று.

சரி மகன் எதோ கஷ்டத்தில் இருக்கிறான் போல மகளிடம் செல்லலாம் என்று .மகளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு .அம்மா நாங்கள் அங்கு வரலாமா .வேண்டாம் அம்மா இங்கு என் மாமியார் மிகவும் கோபக்காரி .

மீண்டும் மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு .அம்மா வாருங்கள் ஆனால் நமது வீட்டில் தங்க இடம் இல்லை அதனால் நமது வீட்டிற்கு அருகிலே ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது அங்கு உங்களை சேர்த்து விடுகிறேன்.

மாதம் நான் பணம் கொடுத்துவிடுகிறேன் என்று .அம்மா அப்பா கண்ணில் தண்ணீர் தாரை தாரையை கொட்டியது.மீண்டும் மகனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு .தம்பி உங்கள் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டனர். பதறியடித்து கொண்டு அவர் வர ஒரு கடிதம் தம்பி இந்த கடிதம் உங்களுக்காக தான் .படியுங்கள் என்று ஒரு முதியவர் கொடுக்க .

வார்த்தை என்பது அம்பு போன்றது .நீங்கள் எங்களை குத்தியது போன்று அது நாளை உங்களை குத்தும் பொழுது தான் அதன் வலி புரியும்.

இப்படிக்கு உங்கள் பெற்று இறந்தோர் .(பெற்று இருந்தவர்கள் நிறைய பேர் இங்கு இருக்க பல பிள்ளைகளை பெற்று இறந்தவர்கள் தான் அதிகம்)

உண்மையில் அவர்கள் இறக்க வில்லை .வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .இந்த எழுத்துக்களில் .
நன்றி

மு .பிரவீன்குமார் .எம் .சி.ஏ

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register